AGRO RANCH GARDEN (ARG) ORGANIC
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
தற்சார்பு வாழ்க்கை வாழ, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை காண, இரு நண்பர்கள் இணைந்து முயற்சி. எங்களின் சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் வாங்கிய நிலத்தில் இயற்கை முறையில் தோட்டம் உருவாக்கி இருக்கிறோம். இதில் எங்களுக்கு சில கனவுகள் உண்டு அவைகளை நிச்சயம் நிறைவேற்றுவதற்கு தீராத முயற்சிகள் நடந்து கொண்டு உள்ளது. இன்னும் பல படிகள் தாண்டவேண்டும் . எங்களுடைய திட்டங்களை/கனவுகளை இங்கு பகிர்த்து கொள்வோம் .மேலும் இதில் உள்ளது போலவே அனைத்தும் இயற்கை முறையில் அமைக்கவேண்டும் என்பது எங்களின் முயற்சி.
ARG பண்ணையின் நோக்கம்
பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்துதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருட்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளம், மகசூலைப் பெருக்குவதோடு, உரச் செலவுகளைக் குறைப்பது போன்றவை, மற்றும் கிராமியப் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று தங்காளால் ஆன பங்களிப்பைச் செய்யும் ARG பண்ணை.
இயற்கை விவசாயம் / ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை
பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்
ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது விவசாயத்தில் ஒரு பண்ணையத் தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல், ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழில்களைக் கூட்டாக மேற்கொள்வதாகும்
வேளாண், தோட்டக்கலைப் பயிர்கள், கால்நடைகள், பழ மரங்கள், வன மரங்கள், பறவைகள், தேனீ, அசோலா, காளான், முயல் , மீன், கால்நடைகள், கோழிகள்: பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, காடை மற்றும் புறா.
இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம் எங்கள் ARG Orgonic பண்ணையின் முக்கிய மதிப்புகள் நாம் யார், எப்படி செயல்படுகிறோம் என்பதை வரையறுக்கின்றன. எங்கள் முக்கிய மதிப்புகள் வாடிக்கையாளர்களுடனான எங்கள் தொடர்புகள் வரை எங்கள் வணிகம் முழுவதும் முடிவுகளை எடுக்க உதவுகின்றன.
இயற்கை சார்ந்த முடிவு
ARG ORGANIC வேளாண்மையில் செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது, மற்றும் விவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு இலக்குகளை நிர்ணயிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இதை இயக்க உதவுவதற்கு, ஒருவருக்கொருவர் பொறுப்பை ஏற்க ஊக்குவிக்கிறோம், இயற்கை வேளாண்மை சவால்களை எதிர்கொண்டு ஆக்கபூர்வமான சிந்தனையை வளர்க்கிறோம்.
ARG ORGANIC இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும். இம்முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. ARG எதிர்காலத் தலைமுறையினருக்கு பயனளிக்கும் முடிவுகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டு இன்றைய விவசாய தேவைகளை நாளைய விவசாய தேவைகளுடன் சமநிலைப்படுத்துகிறோம். நாம் இந்த உலகில் வாழ மிக அவசியமான சில விடயங்கள்:
ஆரோகியமான உணவு ,
இருக்க பாதுகாப்பான இடம் ,
உடுக்க உடை ,
நல்ல காற்றும் நீரும்.
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து"
இயற்கை வேளாண்மை தாக்கம்
இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது.
இயற்கை தாக்கத்தை ஏற்படுத்துவது லாபத்திற்கு அப்பாற்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம், சுற்றுச்சூழலுக்கும் நமது சுற்றியுள்ள சமூகங்களுக்கும் பயனளிக்கும் வழிகளில் செயல்பட முயற்சிக்கிறோம்.
முக்கியமாக நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம்.
வாடிக்கையாளர் கவனம்
வாடிக்கையாளர்களைக் கேட்பதன் மூலமும், தீர்வுகளைக் கண்டுபிடிப்பதன் மூலமும், உடனடியாக பதிலளிப்பதன் மூலமும் எதிர்பார்ப்புகளை மிஞ்சவும், எங்கள் இயற்கை தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பை அதிகரிக்கவும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.
பயிர்களுக்கு இயற்கை உரங்கள் ஆன மண்புழு உரம், சாணஎரு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம், இதனால் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை வாடிக்கையாளரும் பயனீட்டாளரும் பெறலாம்.
தோட்டத்தில் பயிரிட்டுள்ள செடி, கொடிகளின் வளர்ச்சிக்கு விலை உயர்ந்த ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கையான வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உரங்களை பயன்படுத்துவது மண் வளர்த்திற்கும் செடிகளுக்கும் ஆரோக்கியமானது.
Contact
ARG ORGANIC FARM, Salai maraikulam, Kariapatti, Tamil Nadu, India