கன்னி ஆடுகள், கொடி ஆடுகள் மற்றும், சேலம் கருப்பு, பள்ளை ஆடு, மோளை ஆடு.
தரையிலிருந்து சற்றே உயரமான, உலர்வான இடத்தில், கொட்டில் அமைக்கப்படும். நீர் தேங்காத, சொத சொதப்பான பகதிகளைத் தவிர்க்க வேண்டும். தாழ்வான மற்றும் அதிக மழை பொழியும் பகுதிகளில், தரைப் பகுதி சற்றே உயர்வாக இருக்க வேண்டும். கொட்டிலானது 10 அடி உயரத்தில் மற்றும் நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும். ஆண் ஆடுகளை தனியாகக் கொட்டிலில் வைக்க வேண்டும். பெண் ஆடுகளை குழுவாக, ஒரு கொட்டிலில் 60 என்ற அளவில் வைக்கலாம். வெயில் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் சரியான அளவில் தர வேண்டும். ஆட்டுப் புழுக்கை மற்றும் சிறு நீரை சரியானபடி அகற்ற வேண்டும். எல்லா ஆடுகளுக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்கித் தர வேண்டும். அதிகப்படியான ஆடுகளை ஒரு கொட்டிலில் அடைக்கக் கூடாது. குறைந்த எண்ணிக்கையில் ஆடுகள் வளர்ப்பவர்கள் வீட்டின் ஒரு பக்க சுவரில் சாய்வாக கூரை அமைத்து வளர்க்கலாம் அதிக எண்ணிக்கையில் ஆடுகள் வளர்க்க எண்ணும்போது, வயது வாரியாக அவற்றுக்கு தனிப்பட்ட கொட்டகைகள் அமைக்க வேண்டும்.
ஒரு கொட்டகையில் அறுபது ஆடுகள் வரை வளர்க்கலாம். ஆடு ஒன்றுக்கு பதினைந்து முதல் இருபது சதுர அடி வீதம் கணக்கிட்டு இடவசதி ஏற்படுத்தப்பட வேண்டும்
ஒவ்வொரு கிடாவிற்கும் முப்பது சதுர அடி இடம் உள்ள வகையில் தனித்தனியே அறைகள் அமைத்து அவற்றில் விட வேண்டும்
ஈனுவதற்கு பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பு நிறை சினை ஆடுகளை ஈனும் அறைக்கு மாற்ற வேண்டும். இதற்கான அறை ஆறு அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஈனும் அறையைச் சுற்றிலும் கம்பி அல்லது பிளாஸ்டிக் வலை அடித்து பறவைகள் உள்ளே நுழையா வண்ணம் தடுக்க வேண்டும்
முப்பத்தைந்து அடி நீளம், பதினைந்து அடி அகலம் உள்ள கொட்டகையில் எழுபத்தைந்து குட்டிகளை விடலாம். இந்த கொட்டகையிலும் தடுப்புகள் அமைத்து பால்குடி குட்டிகள், பால்குடி மறந்த குட்டிகளை தனித்தனியே விடலாம். கிடாக் குட்டிகள், பெட்டைக் குட்டிகளுக்கும் தனித்தனியே தடுப்பும் அமைக்கலாம்
நோய் வாய்ப்பட்ட ஆடுகளை பராமரிக்க ஒரு தனி அறை இருக்க வேண்டும். தீவனங்கள், கருவிகள் வைப்பதற்கு ஒரு அறை தேவைப்படும். ஆடுகளை எடை போடுவதற்கு ஒரு அறை இருக்க வேண்டும்
மேய்ச்சலுக்கு புதர்ச்செடி / சிறுசெடிகளை பராமரிக்க வேண்டும். தங்களுடைய பண்ணையிலிருந்து (அ) சுற்றியிருக்கும் பண்ணையிலிருந்து பயிரிடப்பட்ட தீவனபயிர்களை மாற்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நார்த்தீவனம் மூலம் 2/3 பகுதி என்ற அளவில் ஆடுகளுக்கு அளிக்க வேண்டும். நார்த்தீவனத்தின் பகுதி பயிறுவகையைச் சேர்ந்த பசும்தீவனமாகவும், பகுதி புற்கள் /இளம் பசும் இலைகளாகவும் அளிக்கலாம். நல்ல தரமான பசும் தீவனங்கள் கிடைக்காத பொழுது, அடர்தீவனங்களை மாற்றாக அளிக்கலாம். 5 வயதுடைய குட்டிகளுக்கு கொலஸ்ட்ரம் தரலாம். பின் குட்டிகளுக்கு ஆரம்ப உணவு அளிக்கலாம். பயிறு வகையைச் சேர்ந்த பசும்தீவனத்தை 15 நாட்கள் முதல் தரலாம். எல்லா நேரங்களிலும் உப்பு கலந்த நீரை குட்டிகளுக்குத் தரலாம். இனப்பெருக்க காலத்தின் போது, பெண் மற்றும் ஆண் ஆடுகளுக்கு கூடுதல் அடர்தீவனம் தரவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட படி, ஊட்டச் சத்து தேவைகளை அளிப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 வருட காலங்களில் 3 குட்டிகளை இடுமாறு திட்டமிட்டப்படி சூழ்நிலைகளை உருவாக்கித் தரவேண்டும். 25 பெண் ஆடுகளுக்கு ஒரு ஆண் ஆடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இனவிருத்தி செய்ய முடியாத ஆடுகளைக் கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி அகற்றிவிட வேண்டும். ஆட்டுப் பண்ணையில் இருந்து கிடைக்கும் முதன்மையான வருமானங்களில் ஒன்று, கிடைக்கக் கூடிய குட்டிகள் ஆகும். எனவே அதிக எண்ணிக்கையில் குட்டிகள் கிடைக்கும் அளவில் பராமரிப்பு முறைகளை கைக்கொள்ள வேண்டும்
பெட்டை ஆடுகள் சராசரியாக ஆறு மாதங்களில் பருவத்திற்கு வந்து விடும். ஆனால் இந்த வயதில் சினையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு முழுவளர்ச்சி பெற்று இருக்காது. மிகவும் சின்ன வயதில் சினை தரிக்கும் ஆடுகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். குட்டிகள் ஈனுவதற்கும் சிரமப்படும். மேலும் குட்டிகளுக்குத் தேவையான பால் சுரப்பும் இருக்காது. எனவே பெட்டை ஆடுகளுக்கு ஒரு ஆண்டு ஆன பிறகுதான் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் குட்டிகளுக்கு நான்கு மாதங்கள் ஆன பிறகு கிடாக் குட்டிகளையும், பெட்டைக் குட்டிகளையும் தனித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு பிரித்து வளர்க்கவில்லை என்றால் இளம் வயதிலேயே இனச்சேர்க்கை எற்பட்டு சினை தரித்து விடும்
ஆடுகளின் சினைக்காலம் ஐந்து மாதங்கள். பெட்டை ஆடுகள் குட்டி போட்ட பின், மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இனச்சேர்க்கை செய்தால் இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈத்துகள் கிடைக்கும். அதாவது குட்டி ஈனும் இடைவெளி எட்டு மாதங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
ஆடுகள் நன்றாக வளர்ச்சி அடைய நல்ல சூழ்நிலை, போதுமான சத்துள்ள தீவனம் மிகவும் தேவை ஆகும். பெட்டை ஆடுகளின் பருவ சுழற்சி ஆண்டு முழுவதும் நடைபெறும். ஆனால் கோடை காலங்களில் ஆடுகள் வெப்ப அயர்ச்சிக்கு உட்படுவதால் பருவ சுழற்சி நடைபெறுவது இல்லை. இனச் சேர்க்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து நாள்தோறும் ஆடு ஒன்றுக்கு கால் கிலோ வீதம் அடர் தீவனம் அல்லது சோளம், மக்காச் சோளம், கம்பு போன்ற தானியங்களைக் கொடுத்து வந்தால் ஆடுகள் முறையாக பருவத்துக்கு வந்து அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் வெளியாகி கருத்தரிப்பு விகிதம் அதிகரிக்கும்.
கர்ப்பக்காலத்தின் முன்னேற்றக் காலத்தில், பெண் ஆடுகளை பிரசவிக்கும் கொட்டில் அல்லது கொட்டிலிலேயே அதற்கென ஒரு இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். குட்டி பிறந்தவுடன் 2 நாட்களுக்கு, பெண் ஆடுகளுக்கு இளம் சூடான உமித்தூள் பரப்பி வைத்திருக்க வேண்டும்.
புதிதாகப் பிறந்த குட்டிகளை அதிகக் கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். நஞ்சுக் கொடியை அகற்றிய இடத்தில் அயோடின் கொண்டு தடவ வேண்டும். முதல் 2 மாதங்களுக்கு, குட்டிகளை மோசமான காலநிலைகளிலிருந்து பாதுகாத்து வைக்க வேண்டும். முதல் 2 வாரங்களுக்கு குட்டிகளுக்கு கொம்பை அகற்ற வேண்டும். நல்ல மட்டன் உற்பத்திக்காக ஆண் குட்டிகளுக்கு விறைநீக்கம் செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணைப்படி குட்டிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். 8 வாரம் இருக்கும் போது குட்டிகளை பால்குடி மறக்க செய்ய வேண்டும்
ஆடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் போது சரியான பராமரிப்பு முறைகளைக் கையாளுவதற்கு அடையாளம் இடுவது அவசியம் ஆகும். இவற்றை 3 முறைகளில் செய்யலாம். 1. காதுகளில் பச்சைக் குத்தி எழுத்துக்களைப் பொறித்தல் 2. வாலில் பச்சை தொழில் குத்துதல் 3.காதுகளில் உலோகம் அல்லது பிளாஸ்டிக்குளால் ஆன அடையாள அட்டைகளை மாட்டுதல் போன்ற முறைகளைக் கையாளலாம். இவை ஒவ்வொரு ஆடு பற்றி விபரப் பதிவேடுகளை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும்
கொம்பு நீக்கம் செய்வதால் ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்க இயலும். கொம்பு உடைதல், கொம்புகளினால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க இயலும். கிடாக்குட்டிகள் பிறந்து 2-5 நாட்களுக்குள்ளும், பெட்டைக்குட்டிகளுக்கு 12 நாட்களுக்குள்ளும் கொம்பு நீக்கம் செய்தல் வேண்டும். நீக்கம் செய்யப்படவேண்டிய பகுதியைச் சுற்றியு்ள முடிகளை நீக்கிவிட்டு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவேண்டும். காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஷ் கொண்டு கொம்பு வளரும் பகுதி புண்ணாகும் வரை நன்கு தேய்க்கவேண்டும். எக்காரணம் கொண்டும் காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஸ் கண்களில் படக்கூடாது. மின்சார கொம்பு நீக்கியைப் பயன்படுத்துதல் சிறந்தது. குட்டியின் வாயை அடைக்கும் போது, அது மூச்சு விட ஏற்றவாறு அடைக்கவேண்டும். அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். வயது முதிர்ந்த ஆடுகளில் செய்யும் போது வளர்ந்து விட்ட கொம்புகளை இரம்பம் கொண்டு அறுத்துவிடவேண்டும். இவ்வாறு செய்யும் போதே ஈக்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டு
இனப்பெருக்கத்திற்குத் தேவையில்லாத கிடாக்களை காயடித்து விடலாம். கிடாக்களை காயடிக்கும் சரியான வயது 4-6 மாதங்கள் ஆகும். பர்டிஸோ கருவி என்ற கருவி மூலம் காயடித்தால் நோய்த் தொற்று அபாயங்கள் குறையும் பயன்கள் 1. இறைச்சியின் சுவை அதிகமாக இருக்கும். 2. உடல் எடை விரைவாக அதிகரிக்கும். 3. ஆட்டுத் தோலின் தரம் உயர் மதிப்புக் கொண்டதாக இருக்கும். 4. அமைதியாக இருக்கும்
ஆடுகளின் சிறந்த பராமரிப்பிற்கு நகங்களை நன்கு வெட்டுதல் வேண்டும். இல்லையெனில் நகம் பெரிதாக வளர்ந்து, காலை பலகீனப்படுத்தும். 30 நாட்கள் இடைவெளியில் கூரிய கத்தி, அல்லது கத்தரிக்கோல் வைத்து நறுக்கி விடுதல் வேண்டும்
குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ளுதல், அசாதாரணமாக நடந்து கொள்ளுதல் போன்றவை எல்லாம் ஆடுகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகளாகும். அதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது உடல்நிலை சாயில்லாதவாறு தெரிந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். நோய்கள் எதுவும் தாக்காதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஏதும் பெரிய அளவில் நோய் தென்பட்டால், மற்ற ஆடுகளிடமிருந்து தனித்து வைத்திருக்க வேண்டும். ஆடுகளுக்கு வயிறை சுத்தம் செய்யும் மருந்தை சீராக தந்து கவனிக்க வேண்டும். சுத்தமான, மாசுபடாத உணவு மற்றும் நீரை தர வேண்டும். தடுப்பூசி மருந்து அட்டவணைப்படி பரிந்துரைக்கப்பட்டவைகளை போட வேண்டும்
சதைப்புள்ள, குண்டான குட்டி ஆடுகள், அதனுடைய புழுக்கை, வளர்ந்த ஆடுகளை விற்பனை செய்யலாம். ஆடு வெட்டுமிடம், தனிப்பட்ட இறைச்சி உண்ணும் நபர்கள் இருக்கும் இடங்கள், வேளாண் பண்ணைகளில் இவற்றை விற்கலாம். அதனால் ஆடு வெட்டுமிடம் வசதி, அல்லது உயிருடன் உள்ள ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் உள்ள இடத்தில் விற்கலாம். வேளாண் பண்ணைகளுக்கு ஆட்டின் புழுக்கையும் அதிகளவில் தேவைப்படுகிறது